2010ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி, மிகவும் மகிழ்ச்சிகரமாக கழித்த நாட்ககளில் ஒன்று. அன்றைய தினம் தான் பல்லவர்கள் தலை நகராம் காஞ்சி மாநகரில், சில மணி நேரங்களை பழங்கால சிற்பங்களை ரசித்து கொண்டும் வியந்தும் மகிழ்ந்தோம். காலை சுமார் 8.30 மணி அளவில் வீட்டில் (மண்ணிவக்கம்)இருந்து பாலாஜி ட்ரவல்ஸ் கார் மூலம் சிறு மழை தூரலில்( சுற்று சூழல் சீர்கேட்டால் காலம் இல்லாத காலத்தில் பெய்யும் மழை). காஞ்சி நகர் நோக்கி பயணம் தொடங்கினோம் நானும் என் சகோதரர் ஸ்ரீதரனும், கண்ணனும்.
படப்பை, ஒரகடம், வாலாஜாபாத் வழியாக சுமார் 10 மணி அளவில் சின்ன காஞ்சிபுரம் பேரருளாளன் எனப்படும் வரதராஜ பெருமாள் கோவில்(108 திவ்ய தேசங்களுள் ஒன்று) சென்றடைந்தோம். அங்கே மனம் குளிர பேரருளாளனை தரிசித்துவிட்டு, வெளியே திருக்குளத்தை ஒட்டியிள்ள சிற்ப மண்டபம் மற்றும் சுற்றுபகுதிகளை படம் பிடித்துக்கொண்டோம். மண்டபத்தின் எதிரே விற்கும் பிரசாத கடையில் புளியோதரை மற்றும் மிளகு வடை வாங்கி சுவைத்தோம், இவை இரண்டும் தவர விட கூடாதவை. ஆதி மூலவர் எனப்படும் அத்தி மரத்தால் ஆன அத்தி வரதர் திருக்குளத்தின் உள்ளேயே சயன திருக்கோலத்தில் உள்ளார், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் குளத்தில் இருந்து வெளியே வந்து சுமார் 10 நாட்க்கள் பக்த்ர்களுக்கு அருள்வார். குளக்கரையில் சக்கரத்தாழ்வார் நரசிம்மருடன் காட்சி அளிக்கிறார்.
பின்னர் அங்கிருந்து பெரிய காஞ்சிபுரம் சென்று அங்கு ஏகாம்பரநாதர் கோவில் அருகில் உள்ள பாண்டவ தூத பெருமாள் கோவில்(108 திவ்ய தேசங்களுள் ஒன்று) சென்றோம். நான் முன்பே ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்றிறுப்பதால் இந்த கோவிலின் சிறப்பு தெரியும், கெளரவர் சபையில் விசுவரூபம் எடுத்த கண்ணபிரானின் சுமார் 28 அடி உயர அமர்ந்த திருக்கோலம் தான் இங்கு மூலவர், என் சகோதரர்கள் இருவரும் மூலவரை பார்த்து பிரமித்து போனார்கள். நான் இந்த கோவிலை பற்றியும் பெருமாளை பற்றியும் முன்பே புத்த்கங்கள் மூலமாகவும், வலைதளங்கள் மூலமாகவும் அறிந்திருந்த்தால் சும்மர் ஒரு வருட்த்திற்க்கு முன்பு ஒரு முறை தரிசித்து இருக்கிறேன். பாண்டவர்களின் பேரன் ஒருவன் கண்ணபிரானின் விசுவரூபத்தை கான வேண்டி காஞ்சி வந்து யாகங்கள் செய்து கண்ணன் பாண்டவ தூத கோலத்துடன் காட்சி அளித்த்தாக புராணம் சொல்கிறது. அனைவரும் பார்த்து பிரமித்து மகிழவேண்டிய பெருமான்.
பாண்டவ தூதர் கோவில் கோபுரம்
பின்பு அங்கிருந்து காமாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோவில்லுக்கு(108 திவ்ய தேசங்களுள் ஒன்று) சென்றோம். மாபலி சக்கரவர்த்தியிடம் 3அடி மண் கேட்டு ஓர் அடியால் பூமியையும் ஓர் அடியால் வானத்தையும் அளந்துவிட்டு மூன்றாம் அடி எங்கே என மாபலியை கேட்க்க என் சிரம் தான் மூன்றாம் அடி என சொல்ல தன் திருவடியால் மாபலியை பாதாளத்தில் அழுத்தும் கோலத்தில் மிகவும் உயரமான பெருமாள்(பாண்டவதூத பெருமாளை போலவே). இந்த கோவிலின் உள்ளேயே இன்னும் மூன்று திவ்ய தேசங்கள் உள்ளன(காரகம், நீரகம், கார்வண்ணம்). உலகளந்த பெருமாள் சந்னிதியிலேயே ஆதிசேஷ ரூபமாக பெருமாள்(ஊரகத்தான்) தனியே காட்சி தருகிறார். இதுவும் அனைவரும் பார்த்து அதிசயிக்க வேண்டிய திருக்கோவில்.
உலகளந்த பெருமாள் கோவில் வாசல்
அடுத்தபடியாக கச்சி ஏகம்பன் என பக்தர்கள் போற்றும் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சென்றோம். சிவ பெருமான் லிங்க திருமேனி மட்டும் அல்லாமல் மனுட உருவத்திலும் காட்ச்சி அளிக்கும் வெகு சில திருத்தலங்களில் ஒன்று. பஞ்ச பூத தலங்களில் மண் தலம். புராண வரலாற்றின் படி சுந்தர மூர்த்தி நாயனாருக்கு ஒரு கண் பார்வை திரும்ப்ப கிடைத்த தலம். 3500 ஆண்டுகள் பழமையான மாமரம் இருந்த திருத்தலம். பார்வதி சிவபெருமானின் அருள்பெர மாமரத்தி அடியில் தவம் இருந்த போது அந்த தவத்தை சோதிக்க சிவன் அந்த மாமரத்தை எரிக்க பார்வதி திருமாலை பிராத்திக்க பெருமால் சங்கு சக்கர தாரியாக அம்ருத கிரணங்களை கொண்டு மாமரத்தை தழைக்க செய்த்தாகவும், புரானம் செல்கிறது. இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் பெருமாள் அங்கேயெ ”நிலா திங்கள் தூண்டன்” (108 திவ்ய தேசங்களுள் ஒன்று) என்னும் பெயரோடு காட்சி அருள்கிரார். இந்த பெருமாள் சந்நிதியிலேயே சற்று உள்ளே நோக்கினால் இன்னோரு பெருமாள் சிலை உள்ளது, இதை பற்றி அர்ச்சகரை விசாரித்த்தில் அவர் சொன்ன தகவல், அந்த சிலை தான் முதலில் இருந்த சிலை என்றும் அந்த சிலை பின்னம் அடைந்த்தால் இப்போதுள்ள சிலை ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் காலத்தில் நிறுவப்பட்ட்தாகவும் சொன்னார்.
மற்றோர் சோதனையாக சிவன் தன் தலையில் உள்ள கங்கையை ப்ரவகிக்க செய்கிரான் தான் பிடித்து வைத்துள்ள மணலான லிங்கம் தண்ணீரில் அடித்து கொண்டு போக கூடாதென லிங்கத்தை தழுவிக்கொள்ள சிவன் மகிழ்ந்து காட்ச்சி அளித்து பார்வதியை மனந்த்தாக கதை.
மிகவும் பிரம்மாண்டமான திருக்கோவில், பெரிய சுற்று பிரகாரம். அழகான திருக்குளம். அருமையான சுதை நந்தி என மிகவும் அழகான திருக்கோவில். இங்கும் பிரசாத கடையில் விற்கும் பிரசாதம் மிகவும் சுவை மிகுந்த்தாகும். இந்த கோவில் தரிசனம் மற்றும் படங்கள் எடுத்து முடிக்கும் போது மதியம் கோவில் மூடும் நேரமாகிவிட்ட்து.
தம்பி நவனீதகண்ணன் ஆலோசனையின் பேரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ”அடையாறு ஆனந்த பவன்” உணவகத்தில் மதிய உணவு அருந்தினோம். முழுசப்பாடு 60 ரூபாய்க்கு அருமையாக இருந்த்து. உணவு இடை வேளைக்கு பிறகு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கைலாசநாதர் கோவிலுக்கு சென்றோம்.
பின்பு தான் தெரிந்த்து இந்த கோவில் மூலவர் சந்நிதியின் சிறப்பு, மூலவரை சுற்றிவர ஆரம்பிக்கும் இடத்தில் குனிந்து தவழ்ந்து தான் ஆரம்பிக்க வேண்டும் பிறகு சிறிது தூரம் செல்ல செல்ல நிமிர்ந்து சாதரனமாக நடக்கலாம் சுற்று முடியும் இடத்தில் மீண்டும் குனிந்து தவழ்ந்து வந்து தான் முடிக்க முடியும். இதன் தத்துவம் என்னவென்றால், ஒரு மனிதன் குழந்தையாக பிறந்து தவழ்ந்து பிறகு நடந்து வயோதிகத்தில் கூன் வளைந்து குனிந்து தவழ்ந்து தான் தன் வாழ்கையை முடிக்கிறான். இந்த பெருமானை இப்படி வலம் வந்தால் மீண்டும் ஒரு பிறப்பு என்பதே கிடையாது என்பது நம்பிக்கை. இந்த கோவிலுக்கு விஜயம் செய்த ராஜ ராஜ சோழன் இதை விட பிரம்மாண்டமாக ஒரு கோவிலை கட்ட வேண்டும் என என்னம் கொண்டு தான் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டினான் என வரலாறு. கைலாச நாதரை தரிசிக்காமல் வந்த்து சற்று விசனத்தையே தறுகிறது இப்போது.
சுமார் நான்கு மணி அளவில் வைகுந்த பெருமாள் கோவில் எனப்படும் “பரமேஸ்வர விண்ணகரம்” என ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருக்கோவிலை சென்றடந்தோம். கி.பி. 674-800 காலகட்ட்த்தில் 2ம் நந்தி வர்ம பல்லவனால் கட்டப்பட்ட கோவில். திருமால், இருந்த, கிடந்த, நின்ற திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. கோவில் பல் வேறு சிற்பங்களுடன், 3 அடுக்குகளாக அமைந்துள்ளது. கீழ் அடுக்கில் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் மிகவும் அழகுடன் அருள்பாலிக்கிறார். இரண்டாம் அடுக்கில் திருமால் சயன திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ரங்கநாதராக அருளிறார். மேல் தள்த்தில் பெருமான் பரவாசுதேவனாக நின்ற திருக்கதில் இருக்கிறானாம். பொதுவா மக்கள் சென்று பார்க்க கூடிய வகையிலே கீழ் அடுக்கில் உள்ள வீற்றிருக்கும் பெருமாள் மட்டுமே உள்ளார். நாங்கள் சென்றிருந்த போது ASI அதிகாரி ஒருவர் அவரது உறவினர்களுடன் வந்திருந்த காரணத்தால், 2ம் அடுக்கு திறக்க பட்ட்து, அதன் காரனமாக எங்களுக்கும் தரிசனம் கிடைத்த்து. இல்லை என்றாம் ஏகாதசி நாட்க்களில் மட்டுமே தரிசன்ம் கிட்டுமாம்.
இனி இந்த கோவில் பற்றி ஒரு புராண கதை:
வித்ர்ப்ப தேசத்தை ஆண்ட விரோசன்னுக்கு மக்கட்பேரில்லாமல் காஞ்சி கைலாசநாதரை பூசிக்க அவர் அருளால் விஷ்ணுவின் வாயில் காவலர்கள் 2 மகன்களாக பல்லவன், வில்லவன் என பிறந்தனர். அந்த மகன் கள் இருவரும் பெருமாளை வேண்டி யாகம் செய்ய, திருமால் ஸ்ரீ வைகுண்ட நாதனாக சேவை சாதித்த படி அமர்ந்த திருக்கோலத்தில் வந்த்தாக நம்பிக்கை.
இவ்வாறு இத்தனை கோவில்களையும் எழில் மிகுந்த சிற்ப கலை நயங்களையும் கண்டு களித்த்த மன நிறைவோடு சுமார் 6 மணி அளவில் வீடு திரும்பினோம். எங்களோடு இந்த பயணத்தில் வாகணம் ஓட்டி எங்களோடு நல்ல ஒத்துழைப்பு தந்த பாலாஜி டிராவல்ஸ் ஓட்டுனர் சிவா அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.
படங்கள்: நவநீதக்கண்ணன், ஸ்ரீதரன், கிருபாகரன்.
11 comments:
First of all I thank my bothers Sridharan & Krubhakaran. It’s a wonderful day and a trip I enjoyed more on the week days. We have enough cameras but I’m worried on that kailasanathar temple because its 2nd time in kailasanathar temple am not having good camera. A course I’m not a superb guy in handling the camera but in the place I feel how camera is important in kailasanathar temple. God’s grace am having mobile camera phone its help in that place. In that place I realize how mobile camera helps me in that place. In mobile itself I capture 107 snaps. It’s wonderful place near to Chennai. Blog viewers don’t miss such good places in your life time. Once again thanks to my loveable bothers.
Kannaaa Nice trip
Superb photos, great details, wish i could have been one of the companion. How does the pictures look so natural, its because of camera lens or by correct lighting.
Looking forward for more such trips in future
Thanks for the comments Anand. The Snaps were taken in Samsung mobile, Olympus 6MP, Fuji 12MP and Canon S5IS. all the elements were helping us in the trip so the out put is good.
No words to describe this wonderful presentation. I was surprised to see some of the snaps, which I didn't noticed in my visits. Well observed, beautiful composition and excellent photography. Text composition is superb. We can call him as Pulavar Krubhakaran. I had visited most of these temples more than once, But I didn't realized the significance during that time. I still remember the kailasanathar kovil inner pragharam and it's associate story, when i first visited "kailasanathar kovil" in 1996 with my uncle, I feared to enter into the inner pragharam, because it's a very small entrance(2ft X 2ft) and passage of less than 2ft. I was feared to enter, because my uncle(he is native of kancheepuram)told that there is a secret subway between kailasanathar, ekambaranathar and kamatchi kovil. I feared about bats, insects in the dark passage. During that time, the temple was in bad shape, but everyday pooja was performed. Now, things are changed, ASI maintaining this temple very well, but everyday poojas are performed?. This temple is one of the earliest temple of pallavas that still existing.
I like to thank mr.krubhakaran to expose these anicent treasures of pallavas to the world through his blog.
Well deserve to call this blog as " Treasures of TamilNadu". I desire that Mr. Krubhakaran must come out with a video blog or do a tele-serial about the temples in Television channels.
He proved his capability in photography and ability in text composition and capacity in the presentation.
He deserve to anchor a TV program, Will he desire!!!
thaks for the comments Suresh,good info about Kailasanathar temple. If all the things goes well with us, we can make the things u wished.
Beautiful Krupa.
Just Beautiful.
The Description.
The Silky Rain.
The Photos.
The Culture.
The Heritage.
We Proud.
You made us Proud Again..
Thanks for the comments JaniBh Sir
படங்கள் அனைத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள்.
Thank U Bhuvaneshwari Ramanathan
Really nice. I ever have the wish to go to the temples like these. By seeing your collections it kindles me. Thanks for the collection. And I also add the comments given by Mr. Suresh along with this. Go ahead. Improve our tamilland's pride...
Post a Comment